×

சிவிசி.யின் விசாரணை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல்

புதுடெல்லி: சிபிஐயில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து மத்திய லஞ்ச கண்காணிப்பு ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை (சிவிசி) உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்கிறது.  நிதி மோசடி வழக்கில் சிக்கிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி, ஐதராபாத் தொழில் அதி பர் சதீஷ் சனா ஆகியோரை விடுவிக்க சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா 2 கோடி லஞ்சம் பெற்றார் என சிபிஐ சிறப்பு  இயக்குனராக பணியாற்றிய  ராகேஷ் அஸ்தானா குற்றம் சாட்டினார். இது பொய் குற்றச்சாட்டு என மறுத்த அேலாக் வர்மா, இந்த வழக்கில் 5 கோடி கேட்டது ராகேஷ் அஸ்தானாதான் என வழக்கு பதிவு செய்தார். சிபிஐ.யில் உயர் பதவியில் உள்ள இருவர் இடையே எழுந்த மோதலால், இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சிபிஐ இயக்குனர்கள் மீதான லஞ்ச புகாரை மத்திய லஞ்ச கண்காணிப்பு ஆணையம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் 2 வாரத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, அலோக் வர்மா, அஸ்தானாவிடம் சிவிசி விசாரணை நட த்திய அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு இன்று விசாரிக்கிறது. சிபிஐ இடைக்கால  இயக்குனராக  நியமிக்கப்பட்டுள்ள  நாகேஸ்வர ராவ் இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை ஏற்பது பற்றியும், உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CVC ,Supreme Court , CVC, Supreme Court
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...