×

சரக்கு பெட்டக மாற்று முனையம் வேண்டாம்: படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடலில் போராட்டம்

தென்தாமரைகுளம்: குமரியில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி அருகே கீழமணக்குடியில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆயிரத்திற்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கருப்பு கொடியை பறக்கவிட்டனர்.கன்னியாகுமரி கோவளத்தில் சரக்கு பெட்டக முனையம் அமைக்க மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி இந்த திட்டத்திற்காக தனியாரிடம் ஆர்வம் தெரிவிக்க கோரி விளம்பரம் வெளியிடப்பட்டது. இதையடுத்து துறைமுக திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தூத்துக்குடி சென்று பொறுப்பு கழகத்தின் முதன்மை பொறியாளரை சந்தித்தும், கடிதம் கொடுத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் துறைமுக திட்ட விளம்பரம் ரத்து செய்யப்படுவதாக துறைமுக கழகம் கடிதம் அனுப்பி இருக்கிறது என்று தளவாய்சுந்தரம் கூறினார். ஆனால் இது போலி கடிதம் என்று துறைமுக எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். நாகர்கோவில் வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என்று உறுதியளித்தார்.இருப்பினும் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. கீழமணக்குடி புனித அந்தோணியார் குருசடி முன்பு நேற்று துறைமுக எதிர்ப்பு இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு துறைமுக திட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.மேலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டிக் கொண்டு கடலுக்குள் சுற்றி வந்து எதிர்ப்பினை தெரிவித்தனர். கண்டன கூட்டத்தில் மோடி, அமித்ஷா இருவரும் அதானி, அம்பானிக்காக உழைப்பதாக கண்டனக் குரல் எழுப்பினர்….

The post சரக்கு பெட்டக மாற்று முனையம் வேண்டாம்: படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடலில் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thendamaraikulam ,Keezamanakudi ,Kanyakumari ,Kumari ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி