திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் பாஜ போராட்டம்

பெங்களூரு: கர்நாடக அரசின் சார்பில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பாஜவினர் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் இயங்கி வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நவம்பர் 10ம் தேதி திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.  திப்பு ஜெயந்தி விழா அரசின் சார்பில் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவதாக பாஜ  மட்டுமில்லாமல், சில இந்து அமைப்புகளும் அறிவித்தன. இதனால் மாநிலத்தில்  பதட்டமான, மிகவும் பதட்டமான இடங்கள் என்று போலீசார் அடையாளம் கண்டு 144 தடை  உத்தரவு பிறப்பித்ததுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

ஆனால், தடையை மீறி  மாநிலம் முழுவதும் நேற்று பாஜ சார்பில் போராட்டம்  நடந்தது. பெங்களூரு மாநகராட்சி வளாகத்தில் பாஜ கவுன்சிலர்கள் எதிர்க்கட்சி  தலைவர் பத்மநாபரெட்டி தலைமையில் போராட்டம் நடத்தி அரசுக்கு எதிராக  முழக்கம் எழுப்பினர். துமகூரு, சித்ரதுர்கா, தாவணகெரே மாவட்டங்களில்  பாஜவுடன் இணைந்து ஸ்ரீராமசேனா உள்பட இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.  அம்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரை போலீசார் கைது  செய்தபின் மாலையில் விடுதலை செய்தனர்.  சில இடங்களில் முக்கிய சாலைகளில்  மறியல் போராட்டம் நடத்தியவர்களையும் போலீசார் கைது செய்து மாலையில்  விடுவித்தனர். திப்பு ஜெயந்தி விழாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து நேற்று குடகு மாவட் டத்தில் முழு அடைப்பு போராட்டம்  நடத்தப்பட்டது. காலை முதல் எதிர்ப்பாளர்கள் வெளியில் வந்து போராட்டம்  நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: