ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் 2 பேரை சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம்

புல்வாமா: ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தில் டிக்கன் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றும் இதே இயக்கத்தை சேர்ந்த ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றது. கடந்த சில நாட்களாக காஷ்மீர் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: