×

கர்நாடகத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா : பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு போராட்டம்

பெங்களூரு : கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எதிர்ப்பை மீறி திப்பு சுல்தான் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. எதிர்ப்பு போராட்டங்களை தடுக்க பதற்றமான இடங்களில் 144 ங்கு தடை அமல்படுத்தப்பட்டதுடன் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான், இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதனால் திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்தக்கூடாது என்றும் பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

பா.ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு இடையே திப்பு ஜெயந்தி விழா 4-வது வருடமாக இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நடக்கிறது. ஆனால், திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக உட்பட பல்வேறு அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 2015-ம் ஆண்டு மடிகேரியில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதுபோன்று பல கலவரங்கள் தொடர்ச்சியாக நடந்த காரணத்தினால் திப்பு ஜெயந்தியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் மடிகேரி பகுதியில் திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதிலும் சுமார் 65,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 10 துணை ராணுவப்படையினர் ரோந்து பணியில் ஈறுபடுத்தப்பட்டுள்ளது. மடிகேரியில், திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tipu Sultan Jayanti Festival ,protesters ,Karnataka ,Bharatiya Janata Party , Tipu Sultan Jayanti Festival,Karnataka,protest , Bharatiya Janata Party
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...