மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாமோடி பங்கேற்பு

புதுடெல்லி:மாலத்தீவின் புதிய அதிபர் இப்ராகிம் முகமது சோலி அடுத்த வாரம் பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர்மோடிக்கு இப்ராகிம் முகமது சோலி அழைப்பு விடுத்திருந்தார்.  இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் கூறுகையில், “  வருகிற 14 மற்றும் 15ம்  தேதி சிங்கப்பூரில் நடக்கும் 13வது கிழக்காசிய உச்சிமாநாட் டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து 17ம் தேதி மாலத்தீவில் நடக்கும் புதிய அதிபர் இப்ராகிம் முகமதுவின் பதவியேற்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்கிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மணமேல்குடி அருகே கலெக்டர் பங்கேற்ற...