×

பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சர்கார் படக்காட்சிகள் நீக்கம்: படக்குழு விளக்கம்

சென்னை: பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டதாக சர்கார் படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடைமைகளுக்கு சேதம் விளைவித்தனர்.  அதனைத் தொடர்ந்து, திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று, திரையரங்குகளுக்கும், திரைப்படங்களை கானவரும் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது  பாதுகாக்கும் ஒரே நோக்கோடு, சர்ச்சைக்குரியதாக கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Removal ,Sarkar , Public, sarkar, removal, description of the film
× RELATED சர்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு