×

சிறப்பான திட்டத்தின் மூலம் தீபாவளி நெரிசலை குறைத்த போக்குவரத்து போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நெரிசலின்றி சென்று வர சிறப்பான ஏற்பாடுகளை செய்த போக்குவரத்து போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை கொண்டாட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு போக்குவரத்து நெரிசலின்றி சென்று வர சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் இணைந்து இந்த ஆண்டு சிறப்பு ஏற்பாடுகள் ெசய்யப்பட்டது.

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் மற்றும் இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் என 6 சிறப்பு பேருந்து நிலையங்கள் உருவாக்கி அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எளிமையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்தனர்.சிறப்பு வழித்தடங்களை கண்காணிக்க போக்குவரத்து போலீசார், போக்குவரத்து அதிகாரிகள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கொண்ட வாட்ஸ் அப் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் அனைத்து சிக்னல்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனுக்குடன் கண்காணித்து போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது. ெவளியூர்களில் இருந்து ெசன்னை வரும் வாகனங்களை வர சிறப்பு வழித்தடங்கள் மற்றும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல சிறப்பு வழித்தடங்கள் ஏற்பாடுகள் ெசய்யப்பட்டன.

இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில் 2 இணை கமிஷனர்கள், 2 துணை கமிஷனர்கள், 18 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 115 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200 காவலர்கள் இரவு பகலாக கண்காணித்து வாகன நெரிசல் இல்லாமல் போக்குவரத்து சரி ெசய்யப்பட்டது. சாலை விபத்து இல்லா தீபாவளி கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்த போக்குவரத்து போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,Deepavali , Diwali, traffic police, the commissioner's praise
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...