×

அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை

மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக அந்நாட்டின் பிரதிநிதிகள், தலிபான்கள் இடையே ரஷ்யாவில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்தியாவும் பங்கேற்றது.இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ராணுவத்திற்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே 17 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. அங்கு, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு, தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அங்கு அமைதி ஏற்படுத்த ரஷ்யா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஆப்கான் அரசு பிரதிநிதிகள், தலிபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா திட்டமிட்டது. அதில் பங்கேற்க முடியாது என்று ஆப்கான் அரசு அறிவித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில், ரஷ்யா நேற்று 2வது முறையாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்க ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் `வெள்ளிக்கிழமை ரஷ்யாவில் நடைபெறும் ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பங்கேற்கும். ஆப்கானில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும்’ என்று இந்திய ெவளிவிவகாரத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இதையடுத்து,  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று ஆப்கான் பிரதிநிதிகள், தலிபான்கள் இடையே  பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஆப்கான் அரசு நியமித்த அமைதி குழுவை சேர்ந்த 4 உறுப்பினர்கள், தலிபான்கள், ரஷ்ய, இந்தியா பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ அளித்த பேட்டியில், ‘‘இந்த பேச்சுவார்த்தை ஆப்கானில் அமைதி திரும்ப உதவும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உமர் அப்துல்லா கேள்வி
மாஸ்கோவில் தலிபான்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கலந்து கொண்ட மத்திய அரசு, காஷ்மீரில் பிரிவினைவாதிகளுடன் ஏன் அது போன்ற பேச்சுவார்த்தையை நடத்தக்கூடாது? என்று காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : talks ,Taliban ,government ,Afghan ,peace talks , Afghanistan and the Taliban talks, Russia
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...