×

2வது ஒருநாள் போட்டி : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது ஆஸி.,

அடிலெய்டு: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது.அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 50 ஓவரில் 48.3 ஓவரில் 231 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 47 ரன் எடுத்தார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 41, கிறிஸ் லின் 44, ஷான் மார்ஷ், ஆடம் ஸம்பா தலா 22, மேக்ஸ்வெல் 15 ரன் எடுத்தனர். ஹேஸல்வுட் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 4, பிரிடோரியஸ் 3, ஸ்டெயின் 2, என்ஜிடி 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மில்லர் 51 ரன், கேப்டன் டு பிளெஸ்ஸி 47 ரன், மார்க்ராம் 19, ஹெண்ட்ரிக்ஸ் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். என்ஜிடி 19, தாஹிர் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஸ்டாய்னிஸ் 3, ஸ்டார்க், ஹேஸல்வுட் தலா 2, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆரோன் பிஞ்ச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி ஹோபர்ட்டில் நாளை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,South Africa , South Africa, Australia, Win, Test cricket
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...