×

பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க 20,000 பணியாளர்களை நியமித்தது கூகுள்

சான்பிராஸ்சிஸ்கோ: பாலியல் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பணியிடங்களிலும், பொது இடங்களிலும் நடக்கும் பாலியல் தொல்லைகளை மீடு என்ற ஹாஷ் டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கூகுள் நிறுவனத்திலும் அண்மை காலமாக பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக பாலியல் புகாரில் சிக்கிய 48 பேரை பணியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. அவர்களில் 13 பேர் மூத்த அதிகாரிகள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலியல் புகார்களை சிறப்பாக கையாள வலியுறுத்தியும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் கூகுள் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பாலியல் புகார்களுக்கு எந்தவித நடக்கடிகையும் எடுக்கப்படுவது இல்லை எனக்கூறி கூகுள் அலுவலகங்களில் பணிபுரியும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூகுள் வாக் அவுட் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாலியல் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாலியல் தொடர்பான புகார்களை கண்காணிக்க கலிபோர்னியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 20,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Google , Google,Sundar Bhikha,Sexual Complaint,Nomination
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்