×

ராஜபக்சேவை பிரதமராக்கிய தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு

கொழும்பு: இலங்கையில் பின் வாசல் வழியாக மகிந்த ராஜபக்சே அரசை கொண்டு வரும் முயற்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போகாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தனன் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கிய தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனை கூறியுள்ளார். அதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் சிங்கேவை பணிநீக்கம் செய்ததும், அதற்கு பதிலாக மற்றொருவரை பதவியில் அமர்த்தியதற்கும் அதிகாரம் கிடையாது என தெரிவித்தார்.

எனவே சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் என அவர் கூறினார். ஏற்கனவே ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, அவருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்ததை அடுத்து, அக்கட்சியின் எம்.பி.க்களுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil National Alliance ,Rajapakse , Colombo,MP Sumanthanan,Opposition,Rajapaksa
× RELATED இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார...