×

தீபாவளிக்கு பட்டாசை தவிர்த்து மரக்கன்று நட்ட சிறுவன்

ஆம்பூர்: தீபாவளி பண்டிகைக்கு பட்டாசை தவிர்த்து மரக்கன்று நட்ட சிறுவனை அப்பகுதியினர் பாராட்டினர். தீபாவளி என்றாலே சிறுவர்களுக்கு ஆர்வத்தை கூட்டுவது பட்டாசும் புத்தாடைகளும் தான். இதற்கு விதிவிலக்காக ஆம்பூர் அருகே ஒரு சிறுவன் பட்டாசை தவிர்த்து மரக்கன்று நட்டது வியப்புக்குரியதாக அமைந்துள்ளது. ஆம்பூர் அடுத்த குட்டகந்தூரை சேர்ந்தவர் லீலா வினோதன். இவரது மகன் விகான் கிருஷ்ணா(4). இவர் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில், பாட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க பெற்றோர் கூறி வந்ததை நினைவில் கொண்டு பட்டாசு வெடிப்பதை தவிர்த்தார். மேலும், பட்டாசிற்கு பதிலாக தனக்கு மரக்கன்றுகள் வேண்டுமென சிறுவன் தனது பெற்றோரிடம் வாங்கி தர அடம்பிடித்துள்ளான். பின்னர், பெற்றோர் வாங்கி தந்த மரக்கன்றுகளை விகான் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் நட்டார். இவரது இந்த செயலை அப்பகுதியினர் பாராட்டினர். சிறுவனின் செயல் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sidewalk ,Deepavali , Diwali, crackers, sapling
× RELATED ஆவடி செக்போஸ்ட் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்