×

கழுத்தில் துப்பட்டா சுற்றியதால் மூச்சுத் திணறி 5 வயது சிறுமி பலி

சென்னை: வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கழுத்தில் துப்பட்டா சுற்றியதில் மூச்சுத் திணறி 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தது.சென்னை கோட்டூர் நாயுடு தெருவை சேர்ந்தவர் கோகுல் தாமோதரன் (37), தனியார் நிறுவனத்தில் வேலை ெசய்கிறார். இவரது மகள் பாவனா (5), அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். கோகுல் தாமோதரனுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்துதான் பாவனா பிறந்துள்ளார். இதனால் மிகவும் செல்லமாக தனது மகளை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 5ம் தேதி இரவு பாவனா தனது அம்மாவிடம் ெபாங்கல் கேட்டுள்ளார். மகளின் விருப்பத்தின்படி, தாய் சமையல் அறையில் பொங்கல் சமைத்து கொண்டிருந்தார். இதற்கிடையே பாவனா தனது அம்மாவின் துப்பட்டாவை கழுத்தில் சுற்றிக்கொண்டு கதவை மூடியும், திறந்தும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது, துப்பட்டாவின் ஒரு முனை கதவில் மாட்டிக்கொண்டு சிறுக சிறுக சிறுமி பாவனாவின் கழுத்தை இறுக்கி உள்ளது. ஒரு கட்டத்தில் அவள் பேச முடியாமலும், மூச்சு விட முடியாமலும் தவித்துள்ளார். வெகு நேரம் மகளின் சத்தம் கேட்கவில்லை என்று அவரது தாய் வந்து பார்த்த போது மகள் பாவனா மயங்கிய நிலையில் கிடந்ததாள். உடனே அவளை மீட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை ெபற்று வந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dupatta, breathing, child murders
× RELATED போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி...