×

பேருந்து மீது குண்டுவீச்சு சிஐஎஸ்எப் வீரர் உட்பட 4 பேர் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பேருந்து மீது நக்சல்கள் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் சிஐஎஸ்எப் வீரர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக நக்சல்களால் அதிகம் பாதிக்கப்படும் பாஸ்டர் உள்ளிட்ட தொகுதிகளில்  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலை சீர்குலைக்கும் வகையில் நக்சல்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று காலை தண்டேவாடா மாவட்டத்தில்  பசேலி பகுதியில் பேருந்து ஒன்று சென்று  கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்து மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசிவிட்டு நக்சல்கள் தப்பி சென்றனர்.

இந்த குண்டு வெடித்ததில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர், அதில் பயணம் செய்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை (சிஐஎஸ்எப்) சேர்ந்த வீரர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் உயிரிழந்த வீரர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். பேருந்தில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பும்போது குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பில்  மேலும் 2 வீரர்களும் காயமடைந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : player ,CISF , Bombing , CISF player
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...