×

சர்கார் படத்தில் அரசுக்கு எதிரான காட்சிகள் பதிவு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சர்கார் திரைப்படத்தில் அரசுக்கு எதிரான காட்சிகளை பதிவு செய்த, திரைப்படத்தின் இயக்குநகர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் ேநற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி உள்ளது. இந்த திட்டத்திற்காக மிக்சிகள் வாங்க ரூ.500 கோடியும், கிரைண்டர்கள் வாங்க ரூ.600 கோடியும் தமிழகம் அரசு செலவு  ெசய்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளிவந்த “சர்கார்” திரைப்படத்தில் இலவச மிக்சி மற்றும் கிரைண்டர்களை ஏ.ஆர்.முருகதாஸ் தீ யில் தூக்கி எறிந்த காட்சியை கண்டு மிகவும் வேதனை அடைந்தேன். இது தமிழக  அரசை இழிவு படுத்தும் நோக்கில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் இலவச  பொருட்களை அறிமுகப்படுத்தினார்கள். அதன் பயனாக, தங்களின் ஆட்சிகாலத்தில் மக்களுக்கு ஒவ்வொரு பொருட்களை இலவசமாக வழங்கினர்.சர்கார் திரைப்படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் சட்டம்  ஒழுங்கை சீரழிக்கும் வகையில் படம் எடுத்து வெளியிட்டு உள்ளார். இந்த செயல் இலவச பொருட்கள் பெற்ற பொதுமக்களின் மனதை வேதனை அடைய செய்துள்ளது.  எனவே, இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையாளரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AR Murugadoss ,Commissioner ,Office ,Sarkar , AR Murugadoss, Complaint , Commissioner's office
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...