இங்கிலாந்துக்கு எதிரான காலே டெஸ்டில் இலங்கைக்கு 462 ரன் இலக்கு

காலே: காலே டெஸ்டில் இலங்கைக்கு 462 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் துவக்க வீரர் ஜென்னிங்ஸ் அபார சதம் அடித்ததன் மூலம் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் காலேவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ரன்னும், இலங்கை 203 ரன்னும் எடுத்தன. 139 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்களுடன் இருந்தது. பர்ன்ஸ் 11, ஜென்னிங்ஸ் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது.

பர்ன்ஸ் 23 ரன்னில் ரன் அவுட்டாக, மொயீன் அலி (3), கேப்டன் ஜோ ரூட் (3) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனாலும், ஜென்னிங்ஸ், ஸ்டோக்ஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த நிலையில், ஸ்டோக்ஸ் (62) ஆட்டமிழந்தார். தொடர்ந்து, பட்லர் (35), போக்ஸ் (37) கைகொடுக்க ஜென்னிங்ஸ் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணி 93 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.ஜென்னிங்ஸ் 146 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, இலங்கைக்கு 462 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை ஆட்ட நேர முடிவில் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்தது. குஷால் சில்வா 8, கருணாரத்னே 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lanka ,Kallis , Kale Test, Sri Lanka, England, Test
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 661 கிலோ கஞ்சா பறிமுதல்