×

சீன ஓபன் பேட்மின்டன் : கால் இறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்

புஷூ: சீன ஓபன் பேட்மின்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி காந்த் இருவரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.சீனாவின் புஷூ நகரில் நடக்கும் இப்போட்டியின் 2ம் சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புஷானன் ஓங்பம்ரங்பனை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் சிந்து 21-12, 21-15 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்றார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி காந்த், இந்தோனேஷியாவின் டாமி சுகைர்டோவை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 10-21, 21-9, 21-9 என்ற செட்களில் போராடி வெற்றி பெற்றார். அடுத்ததாக கால் இறுதியில் சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியோவையும், காந்த் சீன தைபேயின் சோ தியான் சென்னையும் எதிர்கொள்கின்றனர். 2016ல் சீன ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவரான சிந்து, இதற்கு முன் பிங்ஜியோவை சந்தித்த 2 போட்டியிலும் தோல்வி கண்டுள்ளார். அதற்கு இன்று பழிதீர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China Open Badminton: End Indus ,Srikanth , Chinese Open Badminton, Sindhu, Srikanth
× RELATED பாலியல் தொல்லை தொடர்பாக அனைத்து...