மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

புதுடெல்லி : மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் இபு சோலிஹின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடான மாலத்தீவின் முந்தைய ஆட்சி காலத்தில் சீனாவின் ஆதிக்கம் இருந்தது. இதன் காரணமாக இந்தியாவுடனான நட்புறவை அந்நாடு விலக்கியது. இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இப்ராஹிம் சோலிஹ் வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் அடுத்த வாரம் நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய அதிபரின் அழைப்பை ஏற்று மாலத்தீவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மீண்டும் புதுப்பிக்க மோடி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலக அதிகாரிகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் நட்புறவை அந்நாடு விலக்கியிருந்த நிலையில், தற்போது மோடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் மாலத்தீவுக்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இதயம் தொடர்பான நோய்களை யோகா செய்வதன்...