×

பாமகவா… நீங்க அதுக்கு லாயக்குப்பட மாட்டீங்க…!பிரசாரத்தில் ஒதுக்கும் அதிமுக

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு வடமாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு இருந்தாலும், தென்மாவட்டங்களில் கட்சி பெயரளவிலேயே செயல்பட்டு வருகிறது. இருக்கும் சிலரில் பெரும்பாலானோர் மாநில நிர்வாகிகள் தான். இதனால் அதிமுக கூட்டணியில் தேர்தல் பணிக்காக தங்களை அழைப்பர் என காத்திருந்தனர். ஆனால், மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவினர், இவர்களை கண்டுகொள்ளவில்லையாம். குறிப்பாக மதுரை கிழக்கு, மேலூர் மற்றும் சோழவந்தான் ஆகிய தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட பாமகவினர் தயாராக இருந்தும், அதிமுகவினரோ கண்டுகொள்ளவில்லையாம். இதனால் செம அப்செட்டான மதுரை மாவட்ட பாமகவினர் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை என்று முடிவு செய்துள்ளனராம். கோபத்தின் உச்சமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு போன் செய்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் கூறி வருகின்றனராம். இதனால், மதுரை மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பாமகவினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்….

The post பாமகவா… நீங்க அதுக்கு லாயக்குப்பட மாட்டீங்க…!பிரசாரத்தில் ஒதுக்கும் அதிமுக appeared first on Dinakaran.

Tags : Bamagawa ,AIADMK ,Dinakaran ,
× RELATED பழைய கட்டிடத்தை காட்டி புதிய கட்டிடம்...