கள்ளக்காதலியால் தெருவுக்கு வந்த ஆட்டோ டிரைவர் : கும்பல்கள் தாக்கியதில் கைகள் முறிந்தது

குலசேகரம் : குலசேகரம் மணலிவிளையை சேர்ந்தவர் ரெஜி (41). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஷைனி (31). தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். திக்குறிச்சி பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண், ரெஜியின் ஆட்டோவை அடிக்கடி வாடகைக்கு அழைப்பது வழக்கம். இதனால் அவர்களுக்கிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க ரெஜியின் கள்ளக்காதலிக்கு ஒரு போலீஸ்காரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியுடன் ஹோம் கார்ட்டில் சேர்ந்தார் அந்த பெண். அதன் பிறகு ரெஜியிடம் பணம் கறப்பதிலேயே குறியாக இருந்தார். போதாத குறைக்கு மனைவியை அடித்து பிடித்து வாங்கிய பணத்தையும் ஆசை நாயகிக்கு அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார். ஒரு கட்டத்தில் மனைவியின் தையல் மிஷினையும் விற்று பணம் கொடுத்தார். அப்போதுதான் திக்குறிச்சியில் கணவருக்கு கள்ளக்காதலி இருப்பது ஷைனிக்கு தெரியவந்தது. இதனால் ஷைனி 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்று விட்டார். இதன்பின்னர் நாகர்கோவிலில் வீடு எடுத்து கள்ளக்காதலர்கள் தங்கினர். இதன்பிறகு கள்ளக்காதலியின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாததால் அவர்கள் இடையே பிரச்னை வெடித்து. இந்த நிலையில் ரெஜியின் கள்ளக்காதலிக்கு வேறு பலருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை கைவிட்டார். இதனால் ரெஜி வருமானம் இல்லாமல் அவதிப்பட்டார். வாடகை வாகனங்களை ஒட்டி வந்தார்.

இதன்பிறகு கள்ளக்காதலிக்கு அடிக்கடி போன் செய்தபோது அவர் எடுத்து பேசுவது இல்லையாம்.கடந்த 27ம் தேதி இரவு மீண்டும் வாட்ச்மேன் ஒருவரது போனை வாங்கி பேசியபோது இருவரும் போனில் கடும் வாக்கு வாதம் செய்து இருக்கின்றனர். பின்னர் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் கள்ளக்காதலி தலைமையில் ஆட்டோ, பைக்கில் 5 பேர் சம்பவ இடத்துக்கு சென்று இருக்கின்றனர். அங்கிருந்த ரெஜியை அவர்கள் சரமாரி அடித்து உதைத்ததில் ரெஜியின் 2 கைகளும் முறிந்தன. பலத்த காயம் அடைந்த ரெஜி, குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் ரெஜியின் கள்ளக்காதலி ஹோர் கார்டு பணியில் இருப்பதாலும், போலீஸ்காரரின் தொடர்பு இருப்பதாலும் புகாரை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

வீடு முழுவதும் ஆபாச சிடி


ரெஜி தனது வீடு முழுவதும் ஆபாச பட சிடியை வாங்கி வைத்துள்ளார். இப்படி நாமும் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக இருக்க வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி வற்புறுத்துவாள். தற்போது அவரிடம் தொடர்பை விட்டுவிட்டேன். மீண்டும் மனைவி, பிள்ளைகளை தேடி செல்வேன் என்று ரெஜி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Auto Driver ,gangs , Auto Driver, Kallakadali Street,Hands broke ,gangs hit
× RELATED இளம்பெண் குளிப்பதை படம் எடுத்த ஆட்டோ டிரைவர் கைது