×

ராஜபக்சேவுக்கு போட்டியாக ரணில் பேரணி : கொழும்பில் நாளை மக்களை திரட்ட தீவிரம்

கொழும்பு : இலங்கையில் பிரதமர் பதவியை தக்கவைக்க ரணில் விக்கிரமசிங்கே - ராஜபக்சே இடையே கடும் போட்டி நிலவுவது போன்றே, மக்கள் செல்வாக்கில் நிரூபிப்பதிலும் இருதரப்பினரும் கோதாவில் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் இலங்கை தலைநகர் கொழும்பில், மஹிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, தங்கள் ஆதரவை உறுதி செய்தனர். புறநகர் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி, பத்தரமுல்லை என்ற இடத்தில் ஓன்றிணைந்து, நாடாளுமன்றம் நோக்கி சென்றது.

பேரணியில் பங்கேற்றோர், ராஜபக்சேவுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.  இதற்குப் போட்டியாக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கொழும்பில் நேற்று முன்தினம் கண்டன பேரணி நடைபெற்றது. இந்நிலையில் ராஜபக்சேவுக்கு போட்டியாக ரணில் விக்கிரமசிங்கே தரப்பினர் கொழும்பில் நாளை மீண்டும் மிகப்பெரிய மக்கள் பேரணி நடத்த உள்ளது. நாடு முழுவதும் இருந்து தனது ஆதரவாளர்களை திரட்டி தலைநகர் கொழும்பில் தமது பலத்தை நிரூபிப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்கே கட்சித் தொண்டர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளார்கள்.

முன்னதாக இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதேநாளில் நாட்டின் புதிய பிரதம ராக மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பதவி நீக்கத்தை ஏற்க மறுத் துள்ள ரணில், நானே பிரதமராக நீடிக்கிறேன் என்று அறிவித்துள்ளார். ஜனநாயக மரபின்படி ரணில் தான் பிரதமர் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்ய அங்கீகரித்துள்ளார். இந்த பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு வரும் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அன்றைய தினம் நடைபெறும் வாக்கெடுப்பில் நாட்டின் பிரதமர் ராஜபக்சவா அல்லது ரணிலா என்பது தெரியவரும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranil ,Rajapaksa ,Colombo , Ranil Rally , Rajapakse ,srilanka
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்