×

முதல் நாள் வசூலில் புதிய மைல்கல்! சாதனைகளை முறியடித்த சன் பிக்சர்ஸ் தயாரித்த விஜயின் ‘சர்கார்’

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம்., தமிழகத்தில் முதல் நாள் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. அதுமட்டுமல்லாது இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த நிலையில் தீபாவளியன்று மொத்தம் 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான ‘சர்கார்’..அனைத்து தியேட்டர்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 650 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ‘சர்கார்’, கேரளாவில் மட்டும் 400 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. அதேபோல், கர்நாடகாவில் 190 தியேட்டர்களிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மொத்தம் 350 தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாது, அமெரிக்காவில் 152 இடங்களில் திரையிடப்பட்டு சுமார் 2.31 கோடி வசூல் செய்திருக்கிறது. முதல் நாள் ‘சர்கார்’ திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலுமே அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. இதனால் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாள் மொத்த வசூலாக சுமார் ரூ.30 கோடியை கடந்திருக்கிறது ‘சர்கார்’. மேலும், சென்னையில் முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்த முதல் படம் என்ற சாதனையையும் ‘சர்கார்’  படைத்துள்ளது. தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என பல சாதனைகளை முறியடித்து வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘சர்கார்’. இதற்கு முன்பாக எந்தவொரு தமிழ் படமுமே, முதல் நாளில் இவ்வளவு பெரிய வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay ,Sun Pictures , Vijay, Sarkar, Sun Pictures, AR Murugadas, collections
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...