×

ஃபைசாபாத் மாவட்டம் அயோத்தியா என பெயர் மாற்றம் : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஃபைசாபாத் மாவட்டத்தின் பெயரை அயோத்தியா என மாற்றி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளிப் பண்டிகையை முன்னட்டு 3 லட்சம் பேர் பங்கேற்ற அகல்விளக்கு ஏற்றும் தீப உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி நகரம் இந்துக்களின் கவுரம் மற்றும் பெருமையின் சின்னமாக விளங்குவதாக தெரிவித்தார். எனவே அயோத்தி அமைந்துள்ள ஃபைசாபாத் மாவட்டம் இனி அயோத்தியா மாவட்டம் என்றழைக்கப்படும் எனக் கூறினார்.

மேலும் அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் கட்டப்படும் என்றும் தசரதர் பெயரில் மருத்துவக் கல்லூரியும் கட்டப்படும் என்றும் அறிவித்தார். பிரமாண்ட ராமர் சிலை அமைக்கப்படுவது குறித்து அவர் அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே இந்நிகழ்ச்சியில் தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜோங் சுக் இந்திய பாரம்பரிய உடையான சேலையை அணிந்து கலந்து கொண்டார். முன்னதாக சாராயூ நதிக்கரையில் 3 லட்சத்துக்கு 1152  அகல்விளக்குகள் ஏற்றப்பட்டது. கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழ் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yogi Adityanath ,district ,Faisabad ,Ayodhya , Faisabad district named Ayodhya by Chief Minister Yogi Adityanath
× RELATED போட்டி தேர்வுகளில் முறைகேடு: ஆயுள்...