×

கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு : 5-ல் 4 தொகுதியில் ம.ஜ.த. - காங்கிரஸ் வெற்றி

பெங்களூரு :  கர்நாடகா இடைத்தேர்தல் நடந்த 5-ல் 4 தொகுதியில் வெற்றியால் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 3ம் தேதி கர்நாடகாவில் ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை மற்றும் ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஷிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ராம்நகரம் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டனர். இந்த இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதியில் 2-ஐ காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. பெல்லாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா வெற்றிபெற்றார். மாண்டியா மக்களவை தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் சிவராமகவுடா வெற்றிபெற்றுள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சிவராமகவுடா வெற்றி பெற்றார்.

2 எம்.எல்.ஏ. தொகுதிகள் முடிவு

ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் குமாரசாமி மனைவி அனிதா வெற்றிபெற்றுள்ளார். ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நியமேகவுடா வெற்றிபெற்றார்.   

தேவகவுடா நன்றி

இடைத்தேர்தலில் காங்கிரஸ் மஜத கூட்டணியை வெற்றிபெற வைத்த கர்நாடக மக்களுக்கு தேவகவுடா நன்றி தெரிவித்துள்ளார். கர்நாடக அரசை அகற்ற முயற்சித்தவர்களுக்கு மக்கள் தாக்கப்படம் புகட்டி உள்ளனர் என்று கூறினார்.

2019 தேர்தலுக்கு முன்னோட்டமா ?

2019 தேர்தலில் கர்நாடகாவில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என காங்கிரஸ் நம்பிக்கை அடைந்துள்ளது. இடைத்தேர்தல் முடிவு நாடுமுழுவதும் மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிமோகா பாஜக-வுக்கு

ஷிமோகா மக்களவை தொகுதியில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் 2019 மக்களவை தேர்தலில் வெற்றிக்கு பாடுபடுவோம் என கர்நாடக பாஜக தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka Election ,wins ,Congress , Karnataka Election results, 5 out of 4 - Congress wins
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...