×

வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன், வெள்ளி பொருட்கள் கொள்ளை

சென்னை: அரசு பள்ளி ஆசிரியை மற்றும் தனியார் நிறுவன ஊழியர் வீடுகளின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை மற்றும் வெள்ளி ெபாருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் மதுமதி. இவர் அதே பகுதியில் உள்ள நவோதயா பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உள்ேள சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை மாயமாகி இருந்தது.

அதேபோல், அதே பகுதியில் வசித்து வந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ரகுகுமார்(38) என்பவர், தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகைக்கு ெபாருட்கள் வாங்க நேற்று முன்தினம் வளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ேள சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 45 சவரன் நகை மற்றும் 300 கிராம் ெவள்ளி ெபாருட்கள் மாயமாகி இருந்தது. இரு சம்பவங்கள் குறித்து அந்தந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
 புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே கத்தியுடன் ஸ்கூட்டரில் உலா வந்த வில்லிவாக்கம் நாதமுனி அகத்தியர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி வசிம் பாட்ஷா (22) என்பவனை போலீசார் கைது செய்தனர்.
 அம்பத்தூர், ஐ.சி.எப் காலனி, சுபாஷ் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (28). லாரி டிரைவர். இவரது மனைவி சூர்யா (24). பெரியசாமி தினமும் மதுஅருந்தி வந்ததால், தம்பதியினருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த இருவரும் தீக்குளித்தனர். இதில், சூர்யா சிகிச்சை பலனின்றி இறந்தார். பெரியசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வழக்கறிஞரை வெட்டி மொபட் பறிப்பு
கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர், 17வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (42). வழக்கறிஞர். நேற்று முன்தினம் இரவு ஜான்போஸ்கோ, அம்பத்தூரில் உள்ள நண்பரை பார்க்க வந்தார். பின்னர், இரவு 10 மணி அளவில் அவர் மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் தாம்பரம்- மாதவரம் புறவழிச்சாலை, கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே வந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து கத்தியால் வெட்டி அவரிடம் இருந்து மொபட்டை பறித்துக் கொண்டு தப்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : house ,goods robbery ,sovereigns , 70 shaving, silver products robbery, Chennai crime
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி