×

டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்கப் பணியாளர்களைப் பணியில் இருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கில் இன்று விசாரணை

அமெரிக்கா: டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்கப் பணியாளர்களைப் பணியில் இருந்து நீக்கியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மும்பையைச் சேர்ந்த   டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள அதன் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமெரிக்கர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதை எதிர்த்துப் புச்சானன் என்பவர் வடக்குக் கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் டிசிஎஸ் நிறுவனம் பணியில் இருந்து நீக்கிய தெற்காசியர்களின் விகிதத்தைவிடத் தெற்காசியர்கள் அல்லாதவர்களின் விகிதம் 13மடங்கு அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது பணியாளர்கள் நீக்கத்துக்கான காரணம் குறித்து டிசிஎஸ் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது. திறன் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் தான் பணிநீக்கம் நடைபெற்றுள்ளதாகவும், இனத்தின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யவில்லை என்றும் டிசிஎஸ் நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TCS ,removal ,US , TCS,investigating,removal,employees,work
× RELATED அதிபர் தேர்தலில் பின்னடைவா?.. டொனால்ட்...