×

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை முறியடித்து முன்னேறிச் செல்வோம்: ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி

அமெரிக்கா: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை முறியடித்து முன்னேறிச் செல்வோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி சூளுரைத்துள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வணிகம், வங்கித் துறை ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஹசன் ரவுகானி, பன்னாட்டு விதிமுறைகளுக்கு எதிரான அமெரிக்காவின் சட்டவிரோதமான முறையற்ற பொருளாதாரத் தடைகளை ஈரான் முறியடித்து முன்னேறிச் செல்லும் எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் செய்கையால் ஈரான் பொருளாதாரப் போரை எதிர்கொண்டுள்ளதாகவும் ஹசன் ரவுகானி குறிப்பிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hassan Rouhani ,United States ,Iran , economic sanctions,United States,Iran's President, Hassan Rouhani
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்