×

தென்மாவட்டங்களில் பெய்துவரும் மழையால் கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை: தென்மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் இருந்து வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை காரணமாக பலர் வெளியூர்களுக்கு சென்று விட்டதால் வியாபாரம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் உருளைக்கிழங்கு விலை கிலோவிற்கு ரூ.25 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.30க்கு விற்கப்படுகிறது. அதேபோல 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் 60 ரூபாய்க்கும், 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட முள்ளங்கி 40 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. மேலும் கத்தரிக்காய், புடலங்காய், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை ரூ.30ல் இருந்து ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேங்காயின் விலையில் 5 ரூபாய் உயர்ந்து ரூ.35க்கும், இஞ்சியின் விலை 10 ரூபாய் உயர்ந்து 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. எனினும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் வழக்கம் போல வந்து கொண்டிருக்கின்றன. இதனால் சில காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தாலும் மற்ற சில காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : south , Koyambedu, vegetables, price rise
× RELATED யானை வழித்தடங்களில் உள்ள மின்...