×

ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலி : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி : உலகம் முழுவதும் தற்போது ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆஃபர் தருவதாக கூறி தங்கள் பணத்தில் பெரும்பகுதியை ஆன்லைன் ஷாப்பிங்கில் பலர் செலவிடுகின்றனர். இந்நிலையில், ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆன்லைன் விற்பனை தொடர்பாக லோக்கல் சர்க்கில் என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், கடந்த 6 மாதங்களில் ஆன்லைனில் தங்களிடம் போலியான பொருள்கள் விற்கப்பட்டதாக 20 சதவிகித வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு, ஸ்னாப்டீல் என 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும், 20 சதவிகிதம் பேர் அமேசான் நிறுவனம் போலியான பொருட்களை விற்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக நறுமணம் மற்றும் ஒப்பனை பொருட்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் பைகள் ஆகியவை அதிக போலியானவையாக இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது போலியான பொருட்களை வழங்கும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Online,local circus,Snaptdeal,Amazon
× RELATED 12 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்