×

கொடைக்கானலில் இது கப்புள்ஸ் சீசன் : ஜோடி, ஜோடியாக புதுமண தம்பதியர் குவிகின்றனர்

கொடைக்கானல்:  கொடைக்கானலில் கப்புள்ஸ் சீசன் துவங்கியதையடுத்து புதுமண தம்பதியினர் ஜோடி, ஜோடியாக அதிகளவு வர துவங்கியுள்ளனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல், மே கோடைகாலமாகவும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் குளுகுளு சீசன் காலமாகவும், செப்டம்பர், அக்டோபர் இரண்டாம் சீசன் ஆன ஆப் சீசன் காலமாகவும் கணக்கிடப்படுகிறது. தற்போது இரண்டாவது சீசன் முடிவடைந்து நவம்பர், டிசம்பர், ஜனவரி பனி சீசன் துவங்கியுள்ளது. இந்த காலத்தில் பகல்நேரம் சீதோஷண நிலை ஓரளவு இயல்பாக இருக்கும். மாலை, இரவு நேரங்களில் கடுமையான பனி நிலவும். இந்த சீசனை கப்புள்ஸ் சீசன் எனவும் அழைக்கின்றனர். அதாவது, வடமாநிலங்களில் இந்த சீசனில்தான் திருமணங்கள் அதிகளவு நடக்கும்.

புதுமண தம்பதியினர் தேனிலவிற்காக மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வர். அதன்படி தற்போது கொடைக்கானலுக்கு வடமாநில புதுமண தம்பதியினர் அதிகளவு வர துவங்கியுள்ளனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுமண தம்பதியினர் ஜோடி, ஜோடியாக வருகின்றனர். இவர்கள் குறைந்தது 3 நாளில் இருந்து ஒரு வாரம் வரை தங்கி சுற்றுலா தலங்களை ரசித்து விட்டு செல்வர். மீண்டும் நிரம்பியது ஏரி கொடைக்கானலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரி மீண்டும் நிரம்பி வழிகிறது. இந்தாண்டு ஏற்கனவே தொடர்மழையால் ஏரி பலமுறை நிரம்பி வழிந்தது.  பழநி நகரின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய நீராதாரமே இந்த ஏரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : season , Kodaikanal, season, pair
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு