×

கொல்கத்தாவில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தவறான தகவலால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

கொல்கத்தா : கொல்கத்தாவில் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தவறான தகவலால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் சீல்டா என்ற பகுதியில் இருந்து தினமும் பல்வேறு இடங்களுக்கு மின்சார ரயிகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சீல்டா மற்றும் பூங்கா சர்க்கஸ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சந்தேகப்படும்படியான பொருள் ஒன்று கிடப்பதை ரயில்வே ஊழியர்கள் பார்த்தனர். இது குறித்து உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே தண்டவாளத்தில் வெடிகுண்டு இருப்பதாக வேகமாக தகவல்கள் பரவின.

இதனால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த பொருளை ஆய்வு செய்தனர். ஆய்வில் வெடிகுண்டு அல்ல என்று தெரியவந்தது. அதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினர். சுமார் 1 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்நததால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kolkata , Kolkata, Bomb, Rail Transport
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்