×

தமிழகத்தில் மானிய விலை எல்இடி பல்பு விற்பனை ‘ஜோர்’ :‘உஜாலா’ மூலம் 4,37,002 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு

சென்னை: தமிழகத்தில், ‘உஜாலா’ திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் ‘எல்இடி’ பல்புகளின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதன் மூலமாக, ஆண்டுக்கு ரூ.175  கோடி பணம் மற்றும் 4 லட்சத்து, 37 ஆயிரத்து, 2 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் மின்தேவை, 15,300 மெகாவாட் அளவிற்கு உள்ளது. இதனால், மின் உற்பத்தியை பெருக்குவதற்கும், மின் சிக்கனத்திற்கும்  தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன்விளைவாக, ‘உஜாலா’ திட்டத்தை கடந்த, 2015ம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, நாடு முழுவதும் மின்சாரம் சேமிக்கும் திறனற்ற நிலையில் உள்ள 77 கோடி பல்புகளை அகற்றிவிட்டு, எல்இடி பல்புகளை பொருத்த திட்டமிட்டனர். இந்த எல்இடி பல்புகளை,  சாதாரண பல்புகளுடன் ஒப்பிடுகையில் 10ல் ஒரு பகுதி மட்டும் மின்சாரம் தேவைப்படும். இதனால் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய  அலுவலகங்களில், ‘ஸ்டால்’ அமைக்கப்பட்டு பல்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும், 20க்கும் மேற்பட்ட மின்பகிர்மான வட்டங்களில் இந்த விற்பனை நடக்கிறது. இங்கு 9 வாட், 20 வாட் எல்இடி பல்பு டியூப்லைட், 50 வாட் ஐந்து  நட்சத்திர குறியீட்டுடன் கூடிய மின் விசிறிகள் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று வரையில் மாநிலம் முழுவதும் மொத்தமாக, 33 லட்சத்து, 64 ஆயிரத்து 993 எல்இடி பல்புகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலமாக ஆண்டுக்கு 4 லட்சத்து 37 ஆயிரத்து 2 மெகாவாட்  மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு, ரூ.175 கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,Ujala , Led bulk .,Tamilnadu , 'Ujala', 4,37,002,electricity storage
× RELATED தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற...