×

எலிகளுக்கு கேன்சர் உருவானாலும் செல்போன் கதிரியக்கத்தால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை: ஆய்வில் தகவல்

மாசசூசட்ஸ்: செல்போன்களில் இருந்து வெளியாகும் ரேடியோ அலை கதிரியக்கம் எலிகளுக்கு கேன்சரை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. ஆனால், இது மனிதர்களுக்கு பொருந்தாது  என அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. செல்போனில் இருந்து வெளிப்படும் ரேடியோ அலை கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற ஆய்வு எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் உள்ள தேசிய டாக்சிகாலஜி  திட்டத்தின் கீழ் 30 மில்லியன் டாலர் செலவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரேடியோ அலை கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட ஆண் எலிகளின் மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பில்  கேன்சர் கட்டிகள் ஏற்பட்டன. இந்த அறிக்கையை தொடர்ந்து, ரேடியோ அலை கதிரியக்கமும் மனிதருக்கு கேன்சரை ஏற்படுத்தும் என கேன்சர் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார மையம் அறிவிக்க  வேண்டும் என சில என்ஜிஓ அமைப்புகளும், விஞ்ஞானிகளும் கூறினர்.

எலிகளை வைத்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானி ஜான் புச்சர் கூறுகையில், ‘‘எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகளை மனிதர்களின் செல்போன் உபயோக அனுபவத்துடன் ஒப்பிடக் கூடாது.  மனிதர்கள் செல்போன் பயன்படுத்தும்போது, செல்போனுக்கு அருகில் உள்ள உடல் திசுக்கள்தான் மிக குறைந்த அளவிலான ரேடியோ அலை கதிரியக்கத்துக்கு சிறிது நேரம் உட்படும். ஆனால்  ஆய்வின்போது எலிகள் அதிக அளவிலான ரேடியோ அலை கதிரியக்கத்துக்கு நீண்ட நேரம் உட்படுத்தப்பட்டன. அதனால் இந்த ஆய்வு முடிவுகளை, மனிதர்களின் செல்போன்  உபயோகத்துடன் ஒப்பிடக் கூடாது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cancer,Cellphone radiation,Humans , information in the study
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...