×

அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் பக்கத்து மாநிலங்களில் இருந்து பரவுவதே காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க காரணம்

கோவை: `பக்கத்து மாநிலங்களில் இருந்து பரவுதலே டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க காரணமாகும்’ என்று  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கி உள்ளார்.கோவை அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று  ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 67 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 17 பேரும்  அடங்குவார்கள். காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. காய்ச்சல் பாதிப்பு வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை  எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் துப்புரவு பணிகள், ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கோவை அரசு  மருத்துவமனையில், ஆய்வு நடத்தியபோது, காய்ச்சல் வார்டு அருகே கழிப்பறை சுகாதார பணி சரியாக மேற்கொள்ளப்படவில்ைல. இதனால் அந்த நிறுவனத்தின் மேனேஜர், சூப்பர்வைசர், 2  பணியாளர் என மொத்தம் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல அறிவுறுத்தும் மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார்  மருத்துவமனைகள் உலக சுகாதார நிறுவனம், அரசு அறிவுறுத்திய விதிகளை பின்பற்றி, படுக்கை வசதி இருந்தால் மட்டுமே காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க  வேண்டும்.  இந்த விதிகளை மீறிய சில தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலங்களில் இருந்து பரவுதலே காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க காரணமாகும். இதனால் மாநில எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரமாக  மேற்கொள்ளப்பட்டுள்ளது ட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் தீக்காயம் சிகிச்சைக்கான வார்டு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறும்போது, ``மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை என்பதால் நோய் தடுப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு  வருகிறது’’ என்று தெரிவித்தார்.

மதுரையில் 3 பேர் சாவு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, நரிக்குடி அருகே ஆதித்தனேந்தலைச் சேர்ந்தவர் முருகன். இவரது ஒரு வயது குழந்தை சக்திவேல். முருகனின் மனைவி, குழந்தையுடன் தூத்துக்குடி  மாவட்டம் வேம்பாரில் உள்ள தனது தாயுடன் வசித்துள்ளார். கடந்த வாரம் குழந்தை சக்திவேலை காய்ச்சலுக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பன்றிக்காய்ச்சல் உறுதி  செய்யப்பட்ட நிலையில் குழந்தை சக்திவேல் நேற்று இறந்தான். இதேபோல் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (48), சிவகங்கை மாவட்டம் அரியலூர்  பகுதியைச் சேர்ந்த சித்ரா (54) ஆகியோர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இருவரும் உயிரிழந்தனர்.டாக்டர்களுக்கு எல்லாம் ரிவீட் அடிக்கணும்...அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வருகையையொட்டி அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகள் அவசரம், அவசரமாக சுத்தம் செய்யப்பட்டது.  மருத்துவமனை நிர்வாகத்தினர் கொசுவலைகளை வாங்கி வந்து, காய்ச்சல் தீவிர சிகிச்சை பிரிவின் கட்டில்களில் கட்டி விட்டனர். எனினும், அமைச்சர்கள் ஆய்வு செய்தபோது,  மருத்துவமனையில் சுகாதார வசதி முற்றிலும் சரி செய்யப்படவில்லை. பராமரிப்பு குறைபாடுகள் காணப்பட்டது. இதனால் டென்ஷன் ஆன அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்த டீன்  அசோகன் உள்ளிட்ட டாக்டர்களுக்கு ‘டோஸ்’ விட்டார். மேலும், டாக்டர்கள் மழுப்பல் தகவல் கூறியதால் ஆத்திரமடைந்து, ‘உங்களுக்கு எல்லாம் ரிவீட் அடிக்கணும்’ என்று எச்சரித்தார்.  பின்னர், டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணிக்க முன்னரே அனைத்து மாவட்டத்திலும் ஒரு குழு அமைக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றி காய்ச்சல் நோய் தடுக்க என்னென்ன பணிகளை மேற்கொண்டனர் என்பதை ஆய்வு செய்ய, சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு  மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோவிடம் செல்போனில் அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wijepasakar ,states , Minister,spread,neighboring states,damage
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!