×

ஈரானில் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதிக்கு பிரதமர் மோடியை காரணம்: தர்மேந்திர பிரதான் பேட்டி

டெல்லி: ஈரானில் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதித்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளே காரணம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உட்பட 6 வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015ம் ஆண்டு சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதைவும், உலகம் முழுவதும் பல தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதையும் அமெரிக்கா கண்டுபிடித்தது. இதனால், ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

மேலும், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், இறக்குமதி அளவை படிப்படியாக குறைத்து நவம்பர் 5க்குள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பொருளாதார தடை பாயும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, இந்தியா உட்பட பல நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவை குறைத்துள்ளன. ஆனால், எரிபொருளின் தேவை அதிகமாக இருப்பதால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும் என இந்தியா உட்பட சில நட்பு நாடுகள் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து, இந்தியா, சீனா, தென்கொரியா, துருக்கி, இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய நாடுகள் ஈரானில் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அவற்றின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் நலன்களைப் புறக்கணித்துவிட முடியாது எனப் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அதற்கு இணங்கி அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கான விலையை 45% ரூபாயாகவும், 55% யூரோவாகவும் பெற்றுக்கொள்வது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது முழுவதும் இந்திய ரூபாயாகவே பெற்றுக்கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளதாக கூறினார்.

கச்சா எண்ணெய்க்கான பணத்தை எந்த வங்கி வழியாக எப்படிச் செலுத்துவது என்பது குறித்து ஈரானும் இந்தியாவும் பரிசீலித்து வருகின்றது என்றும் கச்சா எண்ணெய்க்கான விலையாக ஈரான் பெறும் ரூபாயை இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,US ,interview ,Darendra Pradhan ,Iran , Iran, oil imports, US, PM Modi, Dharmendra Pradhan
× RELATED சொல்லிட்டாங்க...