×

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரை இறுதியில் பெடரர் - ஜோகோவிச்

பாரிஸ்: பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரானா பாரிஸ் மாஸ்டர்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, நட்சத்திர வீரரர்கள் ரோஜர் பெடரர் (சுவிஸ்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றனர்.கால் இறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் மோதிய ஜோகோவிச் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 2 மணி, 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்துக்கு மட்டுமே நீடித்தது.
அரை இறுதியில் பெடரர் - ஜோகோவிச் மோதுவது டென்னிஸ் ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது. நேற்று நடந்த முதலாவது அரை இறுதியில் ஆஸ்திரியாவின் தொமினிக் தீமுடன் மோதிய ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ATP tennis tournament, Roger Federer, Novak Djokovic
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...