×

பெர்த்தில் முதல் ஒருநாள் போட்டி : தென் ஆப்ரிக்காவுடன் ஆஸ்திரேலியா மோதல்

பெர்த்: ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி, பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50க்கு தொடங்குகிறது.ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடைபெறுகிறது, 2வது போட்டி அடிலெய்டு மைதானத்திலும் (நவ. 9), கடைசிபோட்டி ஹோபர்ட்டில் 11ம் தேதியும் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து ஒரு டி20 போட்டி கராரா ஓவல் மைதானத்தில் நடக்கிறது.இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளதால், இந்த தொடர் மீதான கவனம் அதிகரித்துள்ளது. தென் ஆப்ரிக்கா: டு பிளெஸ்ஸி(கேப்டன்), பெஹார்டியன், டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், ஹெய்ன்ரிச் கிளாசன், எய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், லுங்கி என்ஜிடி, பெலுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்சி, டேல் ஸ்டெயின்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசல்வுட், ஆஷ்டன் ஏகார், நாதன் கோல்டர் நைல், பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டார்சி ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸம்பா.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ODI match ,Perth ,Australia ,clash ,South Africa , Australia, South Africa, ODI, Perth Stadium
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...