×

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக பிரமுகர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சென்னை,: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சசிகுமார், அதிமுக மேலமைப்பு பிரதிநிதி கவிதா, டாக்டர் திவாகரன் ஆகியோர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சசிகுமார், அதிமுக மேலமைப்பு பிரதிநிதி கவிதா, மற்றும் டாக்டர் திவாகரன் ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தனர். திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆர்.எஸ். பாரதி எம்.பி., காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., உத்திரமேரூர் ஒன்றிய திமுக செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : personalities ,AIADMK ,district ,Kanchipuram West ,DMK ,MK Stalin , Kanchipuram, DMK, Stalin, AIADMK
× RELATED அதிமுக ஆட்சியில் காவிரி நீரை...