×

3.89 லட்சத்தில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ கார், ஏராளமான தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் மிகச்சரியான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி  எரிபொருள் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் வசதிகளை பொறுத்து டிலைட், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா ஆகிய 5 வேரியண்ட்டுகளில்  வந்துள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும், சிஎன்ஜி மாடலும் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய 2 வேரியண்ட் தேர்வுகளில் மட்டுமே கிடைக்கும். பழைய சான்ட்ரோ காரை போன்று டால்பாய் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட புதிய வடிவமைப்பில் வந்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். இப்புதிய காரில் 1.1 லிட்டர் பெட்ரோல்  இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன்வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஏஎம்டி  கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ், சிஎன்ஜி மாடல் 30.48 கி.மீ மைலேஜ் வழங்கும் என ‘அராய்’ அமைப்பு சான்று அளித்துள்ளது. இந்த காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண  இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் 2.5 அங்குல டிஜிட்டல் திரை மூலமாக பல தகவல்களை பெற  முடியும். அனைத்து வேரியண்ட்டுகளிலும், டாக்கோ மீட்டரும் உண்டு என்பது முக்கிய விஷயமாக கூறலாம். இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள்  கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மிரர்லிங்க் வசதியும் இதன் முக்கிய வசதியாக கூறலாம்.

இந்த காரின் டாப் வேரியண்ட்டில் 14 அங்குல ஸ்டீல் வீல்களும் 165/70 அளவுடைய டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்டுகளில் 13 அங்குல ஸ்டீல் வீல்களும் 155/80 டயர்களும்  பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. டாப் வேரியண்ட்டில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர்  உள்ளிட்ட இதர பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரின் மதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும். முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் மற்றும் ரிவர்ஸ் கேமரா ஆப்ஷனலாக கிடைக்கும். சிஎன்ஜி மாடலில் தீயணைப்பு உபகரணமும்  இடம்பெற்றுள்ளது. இப்புதிய கார், இம்பீரியல் பீஜ், மரினா புளூ, பியரி ரெட், தைபூன் சில்வர், போலார் ஒயிட், ஸ்டார் டஸ்ட் மற்றும் டயானா க்ரீன் ஆகிய 7 விதமான வண்ண தேர்வுகளில் கிடைக்கும். இந்த காருக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு  லட்சம் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கான அவசர சாலை உதவி திட்டமும், குறைவான பராமரிப்பு கொண்டதாக இருக்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. விலை - ₹3.89 லட்சத்தில் இருந்து  துவங்குகிறது. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய டாப் வேரியண்ட் ₹6 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Hyundai ,Santro , 3.89 lakhs
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...