×

வழிகாட்டி மதிப்பை குறைத்து மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவு இழப்புக்கு சார்பதிவாளர் பொறுப்பு: ஐஜி எச்சரிக்கை

சென்னை:  வழிகாட்டி மதிப்பை குறைத்து பதிவு செய்தால் ஏற்படும் இழப்புக்கு சார்பதிவாளர் தான் பொறுப்பு என்று ஐஜி குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து மண்டல டிஐஜி, ஏஐஜி, பதிவு அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: * பதிவு அலுவலர்களால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய வழிகாட்டி மதிப்பு பின்பற்றியுள்ள நிலையில், தணிக்கையில் வேறு காரணங்களின் அடிப்படையில் மதிப்பு குறைவு என குறிப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு  அதன் அடிப்படையில் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குறிப்புரைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இது போன்ற குறிப்புரைகளில் ஏற்றுக் கொள்ளத்தக்க உரிய ஆதாரங்கள் இன்றி மேற்கொள்ளப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.  புகார் மனுக்களின் மீது மேற்கொள்ளப்படும் விசாரணையின் இறுதியில் இழப்பு கண்டுபிடிக்கப்பட்டால் தொடர்புடைய பதிவு அலுவலர் ஆவணப்பதிவின் போது உரிய வழிகாட்டி மதிப்பு மற்றும் அனைத்து பதிவு  நடைமுறைகளையும் பின்பற்றி பதிவு செய்திருப்பின் உண்மையை மறைத்து ஆவணம் பதிவு செய்த ஆவணதாரர்கள் மீது இந்திய முத்திரை சட்டப்பிரிவின் படி நடவடிக்கை மேற்கொண்டு, இழப்பினை சம்மந்தப்பட்ட  ஆவணதாரரிடமிருந்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வசூல் செய்திட வேண்டும்.இத்தகைய நிகழ்வுகளில் உரிய சட்டபூர்வ நடவடிக்கை உரிய காலத்திற்குள் எடுக்கப்பட்டிருப்பின் இழப்பிற்கு பதிவு அலுவலர்களை  பொறுப்பாக்க தேவையில்லை.

* தணிக்கையின் போது மனையா, நிலமா மற்றும் மனைப்பிரிவிற்கான மதிப்பு நிர்ணய கோப்புகள் பதிவு அலுவலர்களால் தாக்கல் செய்யப் படாத இனங்களுக்கு மீளமனைப்பிரிவு அமைந்துள்ள கிராமத்தின் உச்சபட்ச மனை  மதிப்பின் அடிப்படையில் இழப்புகள் கணக்கிடப்பட்டு குறிப்புரைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதனை தொடர்ந்து இவ்விழப்பிற்கு சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர்கள் பொறுப்பாக்கப் படுகின்றனர். மேலும் ஒழுங்கு நடவடிக்கை  உள்ளாக்கப்படுகின்றனர். இது முற்றிலும் தவறான நடைமுறை. இதுபோன்ற நிகழ்வுகளில் தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள் மனைப்பிரிவு தொடர்பான கிராம வரைபடத்தின் அடிப்படையில் பதிவுத்துறைத் தலைவரின்  சுற்றறிக்கைகளில் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளின் படி உரிய மனை மதிப்பு நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் இழப்புகள் கணக்கிட அறிவுறுத்தப்படுகிறது.* மாவட்டப் பதிவாளர்களால் மனைப் பிரிவிற்காக நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பு ஆவண தாரர்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் துணைப் பதிவுத்துறைத்தலைவருக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு துணைப் பதிவுத்துறைத்  தலைவரால் இறுதி ஆணை பிறப்பிக்கப்படாத நிலையில் தணிக்கை நடைபெறும் போது மனைப்பிரிவிற்கான துணைப் பதிவுத்துறைத்தலைவரின் இறுதி ஆணை பெறப்பட்ட பின்னரே மதிப்பு குறைவு குறித்து இழப்புகள் கணக்கிட  வேண்டும். மாவட்டப்பதிவாளர்கள் தணிக்கையின்போது ஆவணத்தின் கண்ட சொத்திற்கு வழிகாட்டி பதிவேட்டில் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட வகைப்பாட்டினை தாமாக மாற்றியமைத்து அதன் அடிப்படையில் இழப்பு  ஏற்பட்டுள்ளதாக குறிப்புரை எழுதுவதை தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது.

* சார்பதிவாளர்களால் உரிய காலத்திற்குள் அனுப்பப்பட்டு மாவட்ட பதிவாளரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பின் இழப்பிற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள். மேலும் இது போன்ற  பதிவு கட்டணத்தில் இழப்பு ஏற்படின் பதிவுச்சட்டம் பிரிவின்படி உரியகாலத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள தவறிய பதிவு அலுவலரே பொறுப்பாவார்கள். மாநில கணக்காயர் தணிக்கைகள் தொடர்பாக பெறப்படும்  குறிப்புரைகளின் மீது பதிவுத்துறைத் தலைவரால் மறுத்து பதிலுரைகள் அனுப்பப்படும், பதிவு அலுவலர்கள் இழப்பிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். மாநிலக் கணக்காயர் தணிக்கை குறிப்புரைகள், பதிவுத்துறைத் தலைவரால்  ஏற்கப்படின் இழப்பினை வசூலித்திட உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இது உரிய அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளதா என மாவட்டப்பதிவாளர் உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Defender ,loss ,securitization loss , The guiding, reduced, Responsibility ,securities loss,IG Alert
× RELATED பார்வையிழப்பு தடுப்பு சங்க மாதாந்திர ஆய்வு கூட்டம்