×

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி டிஸ்சார்ஜ்

காத்மாண்டு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர் மருத்துவ கவனிப்புக்கு பிறகு உடல்நிலை தேறியது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாலும், இருதயத்தில் நோய்த் தொற்று காரணமாகவும் சமீபகாலமாக அவர் கடும் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் கடந்த சில வாரங்களாக அவர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. சளி இருமல் அதிகரித்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதால் உடனே மகராஜ்கஞ்ச் நகரில் உள்ள மன்மோகன் கார்டியோ வாஸ்குலார் மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி. ஒலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரையின்படி ஒலி நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nepalese ,KP ,Sharma , Hospital, Nepalese Prime Minister, KP Sharma sound, discharge
× RELATED நாமக்கல்லில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘ரோடு ஷோ’..!!