×

அதிமுக பொறுப்பாளர்கள் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை: 20 தொகுதிக்கான அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெறுகிறது.    இடைத்தேர்தல் நடக்கும் 20 தொகுதிகளுக்கும் அதிமுக தலைமை தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.  ஒவ்வொரு தொகுதிகளுக்கும் மாவட்ட அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக சென்னை வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. அவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்து அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,supervisors , AIADMK supervisors
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...