×

ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் சில்மிஷம் : வாலிபருக்கு தர்ம அடி

எண்ணூர்: சென்னை எண்ணூர் வஉசி நகரை சேர்ந்தவர் ஜோதி (18). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், நேற்று பிராட்வேயில் உள்ள தோழியை சந்திக்க சென்றார். மாலையில், வீட்டுக்கு ஷேர் ஆட்டோவில் புறப்பட்டார். ராயபுரம் வந்தபோது, ஒரு வாலிபர் ஷேர் ஆட்டோவில் ஏறினார். அப்போது, ஆட்டோவில் இருந்த ஜோதியிடம், வாலிபர் சில்மிஷம் செய்துள்ளார். அவர் தட்டிக் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் எண்ணூர் வந்தவுடன், ஆட்டோவில் இருந்து இறங்கி, இளம்பெண் வீட்டுக்கு நடந்து சென்றார். அந்த வாலிபரும், இறங்கி ஜோதியை பின் தொடர்ந்தார்.இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். உடனே பொதுமக்கள், அந்த வாலிபருக்கு சரமாரியாக தர்மஅடி கொடுத்து, எண்ணூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த பாக்கியராஜ் (26) என்பதும், ராயபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்கி வேலை செய்து வருவதும்தெரியவந்தது.  இளம்பெண்ணை பின் தொடர்ந்தது ஏன் என போலீசார் கேட்டபோது, ஆத்திரமடைந்த வாலிபர் அங்கிருந்த பொருட்கள் தூக்கி வீசி உடைத்தார். இதில், மேஜையில் இருந்த கம்ப்யூட்டரும் உடைந்து நாசமானது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem , Sher Auto, Wallyb Silimsham, Attack
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின