×

திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 1,624.24 கோடியில் சத்துணவு பணியாளர்களுக்காக 58% செலவு: அமைச்சர் சரோஜா அறிக்கை

சென்னை: சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 43,205 சத்துணவு மையங்களில் 51.96 லட்சம் மாணாக்கர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. 13 வகையான கலவை சாதம் போன்ற பல்சுவை உணவு வழங்கப்படுகிறது. 31,493 சத்துணவு அமைப்பாளர்கள், 31,437 சமையலர்கள், 31,739 சமையல் உதவியாளர்கள் என மொத்தம் 97,669 பணியாளர்களைக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பணியாளர்களின் பங்கு இன்றியமையாதது என்பதை தமிழக அரசு நன்கு உணர்ந்த காரணத்தினால்தான், அவர்களின் நலனை பேணுவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழக அரசு விளங்கி வருகிறது.  இதனை சத்துணவு பணியாளர்களும் நன்கு அறிவர்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு சத்துணவு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியாளர்களும், சில மையங்களில் 4 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.   சமையலர்கள் சமையல் வேலையையும், சமையல் உதவியாளர்கள் சமையலருக்கு உதவியாக பிற வேலைகளையும் செய்கின்றனர்.  ஆனால், பெருவாரியான மாநிலங்களில் ஒரு மையத்தில் ஒரு பணியாளர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்.  ஒரு சில மாநிலங்களில், ஒரு மையத்தில் அதிகபட்சமாக 2 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீதம் ஊதிய உயர்வுடன் சிறப்பு காலமுறை ஊதியம், வழங்கி வருவது மட்டுமல்லாமல், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளையும் ஏற்று, சத்துணவுப் பணியாளர்களின் ஊதியத்தை அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

அது மட்டுமன்றி, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய 1,624.24 கோடியில் சத்துணவு பணியாளர்களின் ஊதியம், மற்ற படிகள் உள்ளிட்ட நிர்வாக செலவுகளுக்காக 58 சதவீதம் வழங்கி வருகிறது. மாணாக்கர்களின் உணவுக்காக 42 சதவீதம் செலவு செய்யப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nutrition workers ,Saroja , Nutritional, Minister Saroja
× RELATED சிதம்பரம் மாவட்டத்தில் அரசுப்...