×

ரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நேற்று சந்தித்து பேசினார். உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப் பதக்கம் வென்று சாதித்தவர் இந்திய வீராங்கனை மேரி கோம். 2012ல் லண்டன் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வான ஒரே இந்திய வீராங்கனை இவர். லதா ரஜினிகாந்த் சென்னையில் குழந்தைகளுக்கான அமைதி என்ற நிகழ்ச்சியை நடத்தினார். அதில் பங்கேற்க மேரி கோம் அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக சென்னை வந்த மேரி கோம், போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது புகைப்படத்துக்கு பாக்ஸிங் செய்வது போல் ரஜினி, மேரி கோம் ‘போஸ்’ கொடுத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,Mary Kom ,Rajini , Mary Kom, Rajini
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்