×

118 ஆதரவாளர்களுடன் சபாநாயகருடன் ரணில் சந்திப்பு : அவையில் பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு அளிக்குமாறு வலியுறுத்தல்


கொழும்பு :  பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தன்னுடைய கட்சி மற்றும் ஆதரவு எம்பிக்கள் 118 பேருடன் சபாநாயகரை சந்தித்து அவையில் பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு அளிக்குமாறு வலியுறுத்தினார். இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திடீரென நீக்கிவிட்டு, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். நாடாளுமன்றத்தையும் வரும் 16ம் தேதி வரை முடக்கினார். இதனால், இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ரணிலின் பதவி பறிக்கப்பட்டதற்கு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் வரையில் அவர்தான் பிரதமர் என்றும் அறிவித்தார். அவருடைய எதிர்ப்பையும் மீறி பிரதமராக ராஜபக்சே பதவியேற்றார். ஆனால், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற மறுத்து ரணில் அங்கேயே இருந்து வருகிறார். இந்த அரசியல் சூழலில் அதிபர் சிறிசேனா, சபாநாயகர் ஜெயசூர்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை சந்தித்து பேசினார்கள்.இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற முடக்க உத்தரவை ரத்து செய்வதாக அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். இதனிடையே பிரதமர் ராஜபக்சே அமைப்பினர் நேரடியாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தன்னுடைய கட்சி மற்றும் ஆதரவு எம்பிக்கள் 118 பேருடன் சபாநாயகர் ஜெயசூர்யாவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து நாடாளுமன்றத்தை விரைவாக கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அவையில் பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு அளிக்குமாறு வலியுறுத்தினார். அப்போது வரும் 7ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்ட இருப்பதாக அதிபர் சிறிசேனா  தன்னிடம் தெரிவித்தார் என்று சபாநாயகர் ரணிலிடம் கூறினார். அப்போது ரணில் கட்சியை சேர்ந்த ரங்கே பண்டாரா ராஜபக்ஷ தரப்பினர் தன்னிடம் குதிரை பேரம் நடத்தியதாக சபாநாயகரிடம் புகார் தந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,supporters ,Ranil ,Speaker , Ranil meeting with Speaker with 118 supporters: urging the majority to prove their offer
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...