×

சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் சரோஜா வேண்டுகோள்

சென்னை : சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அமைச்சர் சரோஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 2017-18ல் சத்துணவு திட்டத்தின் நி்ர்வாக செலவுக்காக ரூ.949.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். காலம்முறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதையடுத்து சத்துணவு ஊழியர்களுக்கு 16 வகையான சலுகைகளையும் தமிழக அரசு வழங்கி வருவதாகவும், தமிழகத்தை ஒப்பிடும் போது மற்ற மாநிலங்களில் சத்துணவு பணியாளர்களுக்கு ஊதியம் குறைவாகவே வழங்கப்படுகிறது எனவும் அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீதம் ஊதிய உயர்வுடன் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது என கூறினார். இதனால் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணியில் ஈடுபட அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saroja , Struggl, Minister Saroja, requeste,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது