பாலியல் புகாரில் நடவடிக்கை போதாது உலகம் முழுவதும் கூகுள் ஊழியர்கள் வெளிநடப்பு: சுந்தர் பிச்சை விளக்கம்

சான் பிரான்சிஸ்கோ: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உலகம் முழுவதும் கூகுள் நிறுவன ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

கூகுள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. ஆன்ட்ராய்டு சாப்ட்வேரை உருவாக்கிய ஆண்ட்டி ரூபின் மீதும் பல பெண் ஊழியர்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இவை நம்பகமானவை என முடிவு செய்த கூகுள் நிறுவனம், கடந்த 2014ம் ஆண்டில் அவருக்கு வழங்க வேண்டிய 90 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை துண்டிக்காமல் வழங்கியது. இதேபோல், கூகுள் நிறுவனத்தின் எக்ஸ் லேப் டைக்ரன் ‘டிவால்’ மீதும் பாலியல் குற்றச்சாட்டு சில ஆண்டுகளுக்கு முன் சுமத்தப்பட்டது. ஆனால், அதற்கு பின்பும் அவர் டைரக்டராக நீடித்தார். தற்போது மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தனது பதவியை ராஜினமா செய்தார். அவரது பரிசுத் தொகையும் நிறுத்தப்படவில்லை.

கூகுள் நிறுவனத்தில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்காக, அதன் சிஇஓ சுந்தர் பிச்சை, சில நாட்களுக்கு முன் மன்னிப்பு கோரினார். அவர் விடுத்த அறிக்கையில், ‘பெரும்பாலான ஊழியர்களின் கோபத்தையும், ஏமாற்றத்தையும் புரிந்து கொண்டுள்ளேன். நமது சமூகத்தில் நீண்ட காலமாக நீடித்த பிரச்னை கூகுள் நிறுவனத்திலும் நீடித்தது. இந்த நிலை மாறும் என உறுதியளிக்கிறேன். கடந்த காலங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 13 சீனியர் மேனேஜர்கள் உட்பட 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்’ என குறிப்பிட்டிருந்தார்.  ஆனால், இந்த விளக்கம் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் 94 ஆயிரம் ஊழியர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, உலகம் முழுவதும் பல நாடுகளில் பணியாற்றும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று பணி செய்யாமல் வெளிநடப்பு செய்தனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>