ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்ககோரி கவர்னருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம்

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்கக்கோரி கவர்னருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் பொன்னேரியில் நேற்று நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் விடுவிக்கக்கோரி தமிழக அமைச்சரவை  தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் முற்போக்கு சிந்தனையார்கள் என்ற  அமைப்பு,  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்ககோரி கவர்னருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் கையெழுத்து இயக்கம் நேற்று பொன்னேரி யில்நடந்தது.இதில், பொதுமக்கள்,  இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்கக்கோரி அந்த அஞ்சல் அட்டை–் கவர்னருக்கு அனுப்பப்படும் என்று  தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>